‘முத்தலாக்’ முறைக்கு தனிச்சட்டம்- அமைச்சரவை ஒப்புதல்!

Triple-3

இஸ்லாமியர்களிடம் மும்முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் வழக்கம் உள்ளது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு வந்தன. பின்னர் அவை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டன.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. ஆகஸ்டு மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. முத்தலாக் முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனத் தீர்ப்பளித்த நீதிபதிகள், அதைத் தடை செய்யும் விதத்தில் 6 மாதகாலத்துக்குள் தனிச்சட்டம் ஒன்றை இயற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர் . சட்டம் இயற்றும் வரை முத்தலாக் முறைக்கு ஆறுமாத காலத் தடையும் விதித்தனர்.

tripletalaqமுத்தலாக் தடைச் சட்டத்தை நடப்பு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது. குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், கூட்டத்தொடர் முடியும் முன்னர் முத்தலாக் தடைச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், இந்தச் சட்டமசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Leave a Response