காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் நீர்திறப்பு : 9,000 கனஅடியாக அதிகரிப்பு

02-1506919564-mettur-dam332

 மேட்டூர் அணையில் இருந்து, காவிரி டெல்டா பாசனத்திற்கு, திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று முன்தினம் இரவு முதல் 9 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம், அணைக்கு விநாடிக்கு 1,573 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 1,531 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழை வெகுவாக குறைந்து விட்டதால், பாசனத்திற்கு தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதனையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு, நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரத்தை காட்டிலும் தண்ணீர் திறப்பு பலமடங்கு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் சரியத்தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 79.43 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 79.23 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 41.19 டிஎம்சியாக உள்ளது. அதேபோல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 2,100 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

 

Leave a Response