ராஜினாமா பண்ணிட்டு ஓடுங்க.. விஷாலுக்கு எதிராக சேரன் போர்க்கொடி.. போராட்டம்!

xcheran-vishal456-04-1512387398.jpg.pagespeed.ic.ZmNrxBMqsA

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஷால் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடட்டும் என்று இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார். விஷால் ராஜினாமா செய்யும் வரை தயாரிப்பாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நடிகர் விஷால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு இயக்குனர் சேரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது அரசியல் சார்பு இல்லாதது என்றும், அரசை சார்ந்து இருக்கும் துறை என்றும் அவர் கூறியுள்ளார். விஷால் தயாரிப்பாளர்கள் நலன் பற்றி கருதாமல் தன்னுடைய சுய முன்னேற்றத்திற்காக மட்டுமே பாடுபடுகிறார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அவர் ஆர்கே நகர் அல்ல அசோக் நகர், கே கே நகர் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடட்டும் என்றும் சேரன் தெரிவித்துள்ளார். விஷால் வந்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யும் வரை சென்னை அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்கக் கட்டிடத்தில் தயாரிப்பாளர்கள் அனைவரும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சேரன் கூறியுள்ளார்.

Leave a Response