சிம்புவால் 20 கோடி நஷ்டம் : மைக்கேல் ராயப்பன் பரபரப்பு புகார்!

1e88d5396cd5cfff802e054b6ad9a272

நாடோடிகள், கோரிப்பாளையம், பட்டத்து யானை, ஈட்டி, மிருதன் ஆகிய படங்களை தயாரித்தவர் மைக்கேல் ராயப்பன். இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தையும் தயாரித்தார். சிம்புவின் கால்ஷீட் சொதப்பல், கதையில் தலையீடு காரணமாக 20 கோடி நஷ்டம் அடைந்திருப்பதாக மைக்கேல் ராயப்பன் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
“ஒரு நாள் சிம்பு என்னை அழைத்து நான் இப்போது பணத்துக்கு மிகவும் சிரமப்படுகிறேன். என்னுடன் 15 பேர் உள்ளனர். அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. 5 ஆயிரம் கூட என் கையில் இல்லை. பணத்தின் மதிப்பை இப்போது உணர்ந்து விட்டேன். இனி சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்து எனது படம் மாதிரி முடித்து கொடுப்பேன். என்னை வைத்து படம் எடுங்கள் என்றார். அவரது பேச்சை நம்பி அவரை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்தேன். ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்துக்கு சிம்புவை ஒப்பந்தம் செய்தபோது 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார். ஆனால் 27 நாட்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்தார்.
caeb489a4ff0a9e2214c0a8428956c71

ஒவ்வொரு நாளும் 5 நிமிடம், 10 நிமிடம் மட்டுமே நடித்தார். இதனால் நிறைய காட்சிகளில் அவருக்கு பதிலாக டூப் நடிகரை பயன்படுத்தி படமாக்கினோம். பாதி படம் முடிந்த நிலையில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கலாம், தற்போது எடுத்தவரை உள்ள காட்சிகளை வைத்து முதல் பாகமாக வெளியிடுங்கள் என்றார்.இரண்டாம் பாகம் எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துபோட அவர் வரவில்லை. படப்பிடிப்புக்கு சரியாக அவர் ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை.

படத்தின் முதல் பாகம் வெளிவந்து சரியாக ஓடவில்லை. இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் அவர் வரவில்லை. இதனால் எனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. விநியோகஸ்தர்களுக்கும் பைனான்சியர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது.

சிம்புவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரைத் தேடி அவர் வீட்டுக்குச் சென்றால் மணிக்கணக்கில் என்னை காக்க வைக்கிறார். இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது புகார் அளித்தேன்.

சிம்புவால் பெரிய நஷ்டமடைந்து நான் நடுத்தெருவுக்கு வந்துவிட்டேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு மைக்கேல் ராயப்பன் கூறினார்.

D

Leave a Response