ஏ.கே.அந்தோணி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஏ.கே. அந்தோணி (76 வயது) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் அவரது வீட்டில் இருந்தபோது நேற்று மயங்கி கிழே விழுந்தார். இதையடுத்து டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.கே. அந்தோணி, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 7 ஆண்டுகள் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

Leave a Response