தினகரனுக்கு கட்சி சட்டவிதிகள் எல்லாம் தெரியாது! – வைத்தியலிங்கம் எம்.பி!

201708101432326212_MP-Vaithiyalingam-says-EPS-team-resolution-unity-in-ADMK_SECVPF

அதிமுக தொடங்கும் போது சிறுவனாக இருந்ததால் தினகரனுக்கு கட்சி சட்டவிதிகள் எல்லாம் தெரியாது என்று கூறினார் வைத்தியலிங்கம் எம்.பி.!

 

சென்ற வாரத்தில் சசிகலா குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது. அப்போது, தினகரன் காரசாரமாக பேட்டி கொடுத்தார். இதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும் என்று கூறியிருந்தார்.

இதனை வெளிப்படுத்தும் விதமாக, வெளிப்படையாகவே தினகரனின் ஆதரவாளர்கள் என சிலர் வைத்தியலிங்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினர். இதனால் பெரும் நெருக்கடிக்கு உள்ளானார் வைத்தியலிங்கம் எம்.பி.,

Dinakaran

இந்நிலையில், அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில்  வருமான வரிச் சோதனையில் அரசியல் இல்லை என்று கூறிய அதிமுக எம்.பி. வைத்தியலிங்கம்,  வரி ஏய்ப்பு செய்ததாக யார் மீது சந்தேகம் இருந்தாலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்துவது வழக்கம் என்று கூறினார். எனவே இதில் அரசியல் இல்லை எனத் தெளிவுபடக் கூறினார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கும்பகோணத்தைச் சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற  மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்துப் பேசியபின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வைத்தியலிங்கம் நேற்று இவ்வாறு கூறியிருந்தார். அமைச்சர் துரைக்கண்ணு உடனிருந்தார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த வைத்தியலிங்கம், வரிஏய்ப்பு செய்பவர்கள், வருமான வரி கட்டாமல் ஏமாற்றுபவர்களின் வீடுகளில்தான் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொள்வார்கள். எனவே எந்தவித அரசியல் உள்நோக்கமும் இதில் இல்லை என்று கூறினார்.

இந்நிலையில், தன் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளித்த அவர்,  அதிமுக தொடங்கும் போது டிடிவி தினகரனுக்கு 8 வயது என்பதால் அவருக்கு கட்சி சட்டவிதி தெரியாது.

ராமருக்கு அணில் உதவியதுபோல் கட்சிக்கு நான் உதவுவேன்.  என்னை துரோகி என்று சொல்லமுடியாது என்று அழுத்தமாகக் கூறினார்.

Leave a Response