கர்நாடகாவில் 4வது நாளாக தொடரும் மருத்துவர்கள் போராட்டம்!

 

121093-karnataka-protest

கர்நாடகா மாநிலம் பெல்காமில் மருத்துவர்கள் 4வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தனியார் மருத்துவமனைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து அரசுக்கு தெரிவிக்க மாவட்ட அளவில் மருத்துவமனைக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். கட்டணத்தை அரசே நிர்ணயிக்கும். தவறான சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். சிகிச்சையில் குறைபாடு இருந்தால் தனியார் மருத்துவமனை மீதும் அரசு நடவடிக்கை எடுக்கும்.

 

இந்த மசோதாவுக்கு இந்திய மருத்துவச் சங்கம், கர்நாடக தனியார் மருத்துவமனைகள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து முதல்வர் சித்தராமையா மருத்துவர் கூட்டமைப்பு நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது தோல்வியடைந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருப்பதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Leave a Response