கிரிக்கெட்: இந்தியா – இலங்கை இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதில் தாமதம்

2_08209
இந்தியா-இலங்கை இடையே முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவில் மழை பெய்து வருவதால் கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 

இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது. சமீபத்தில் இலங்கை சென்ற இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. அப்போது இலங்கை அணியை சொந்த மண்ணில் முழுமையாக அனைத்துப் போட்டிகளிலும் வென்று அசத்தியது.

 
அதன் பிறகு இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர்களில் விளையாடி அதிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில்தான் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பின் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளிலும் விளையாட இந்தியா வந்திருக்கிறது இலங்கை அணி.
இந்திய அணியைப் பொறுத்தவரை விராட் கோலி தலைமையில் வெற்றிகளை குவித்து வருகிறது. இத்தொடரிலும் இலங்கை அணியை வீழ்த்தும் உத்வேகத்துடன் விளையாடும்.

india-cricket-team-afp_806x60
இந்த முறை அந்த அணியின் கேப்டனாக இளம் வீரர் சந்திமால் பொறுப்பேற்றுள்ளார். அவருடன் வீரர் மேத்யூஸ், சுழற்பந்துவீச்சாளர் ஹெராத் ஆகிய முக்கிய வீர்ர்கள் களம இறங்குகிறார்கள்.
ஈடன் கார்டன்ஸ் மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவே இருக்கும். ஆகவே இரு அணிகளும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கக்கூடும்.

 

இன்று கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி துவங்குவதாக இருந்தது. இந்த முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதில் தற்போது சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவில் மழை பெய்து வருவதால் கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Leave a Response