ஒரு வழியாக நிறைவுபெற்றது வருமான வரித்துறை சோதனை : திவாகரனுக்கு சம்மன்

1497348931-8813

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையை அடுத்து திவாகரனுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனை நிறைவடைந்தது.

தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. முதலில் 187 இடங்களில் ஆரம்பித்த இந்த சோதனை படிப்படியாக 200 இடங்கள் வரை நடைபெற்றது. நேற்று 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை இறுதிக்கட்டத்தை எட்டியது.

சசிகலா குடும்பத்துக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை, ஜெயா தொலைக்காட்சி, அதன் தலைமை நிர்வாக அதிகாரி விவேக் ஜெயராமன் இல்லம், அவரது சகோதரி கிருஷ்ணபிரியா வீடு, ஜாஸ் சினிமா அலுவலகம், நமது எம்ஜிஆர் பத்திரிகை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்றும் சோதனை நடைபெற்றது.

201708231346394706_Dhivakaran-Says-We-have-40-MLAs_SECVPF

இந்நிலையில், கடந்த 5 நாட்களாக நடைபெற்ற சோதனை நிறைவுபெற்றது. 187 இடங்களில் 355 பேரை குறிவைத்து நடத்தப்பட்ட சோதனையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள், பணம், நகை உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், நகை, பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை கணக்கிடும் பணியும் மறுபுறம் நடப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே விசாரணைக்காக கர்நாடக மாநில அதிமுக அம்மாஅணி செயலாளர் புகழேந்தி, போயஸ் தோட்ட ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமார் உள்ளிட்டோருக்கு வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை அடுத்து அவர்கள் இன்று நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை முன்பு ஆஜரானார்கள்.

தஞ்சை மாவட்டம் சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரனின் இல்லம், அவரது கல்லூரியில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை மற்றும் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள திவாகரன் மகள் வீட்டில் நடைபெற்ற சோதனையை அடுத்து திவாகரனுக்கு வருமான வரித்துறை நாளை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.

Leave a Response