நற்பணி தொடரட்டும்: விஜய் சேதுபதிக்கு ராமதாஸ் பாராட்டு

 9 dgl news

மருத்துவராக வேண்டும் என்ற கனவு நனவாகததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் நினைவாக அரியலூருக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

இந்நிலையில், விஜய் சேதுபதி நிதியுதவி வழங்கியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

“விளம்பரத்தில் நடித்ததற்காக கிடைத்த ரூ.50 லட்சத்தை அரியலூர் மாவட்ட அங்கன்வாடிகளின் மேம்பாட்டுக்கு விஜய்சேதுபதி வழங்கியது பாராட்டத்தக்கது. நல்ல வழிகாட்டல், நற்பணி தொடரட்டும்” எனப் பாராட்டி ராமதாஸ் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

NTLRG_20171110105213938532

முன்னதாக நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட அறிக்கையில், “விளம்பர படங்களில் அதிகமாக நடிக்காமல் இருந்தேன். சில விளம்பரங்களை மட்டும் தேர்தெடுத்து நடித்து வருகிறேன். இப்போது அணில் குழுமத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளேன். இந்த விளம்பரப் படத்தில் நடித்ததற்காக எனக்கு கிடைத்திருக்கும் தொகையில், ஒரு பகுதியை கல்வி உதவித் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளேன்.

கல்வியில் பின் தங்கிய மாவட்டமான அரியலூரில் இருந்து அதிக மதிப்பெண் எடுத்து மருத்துவராக ஆசைப்பட்டு, அது முடியாமல் உயிர் நீத்த அனிதாவின் நினைவாக இந்தத் தொகையை வழங்குகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Response