என்எல்சி நிறுவன தொழிலாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு!

 என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்கள் சென்னையில் நடத்த இருந்த போராட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மண்டல தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், நெய்வேலியில் மத்திய துணை முதன்மை தொழிலாளர் நல ஆணையர் சீனிவாஸ், புதுச்சேரி உதவி தொழிலாளர் நல ஆணையர் கணேசன், ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினர் பங்கேற்ற பேச்சுவார்த்தை விருந்தினர் இல்லத்தில் நேற்று நடந்தது. பேச்சுவார்த்தையில் முதன்மை தொழிலாளர் நல ஆணையர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க முற்றுகைப் போராட்டம் 10 நாள்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Response