இந்தியன் சூப்பர் லீக் 4-வது சீசன் முதல் ஆட்டம் மாற்றம்!

Indian-Super-League

கிரிக்கெட்டில் ஐ.பி.எல். தொடர் நடைபெறுவது போல் கால்பந்து போட்டியில் கடந்த 2014-ல் இருந்த இந்தியன் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று வருடங்கள் வெற்றிகரகமாக நடைபெற்றதால், 2017-18-ல் நடக்கும் 4-வது சீசனில் இரண்டு அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடர் வருகிற 17-ந்தேதி தொடங்கி அடுத்த வருடம் பிப்ரவரி 9-ந்தேதி வரை சுமார் 90 நாட்கள் நடைபெற இருக்கிறது.

இதற்கான போட்டி அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி கொல்கத்தாவில் தொடக்க விழா மற்றும் துவக்க ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது.

சமீபத்தில் இந்தியாவில் பிஃபா 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இறுதிப்போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதற்கு ரசிகர்கள் பெருமளவில் ஆதரவு கொடுத்தனர். அத்துடன் போட்டியும் சிறப்பான வகையில் நடத்தப்பட்டது.

 

india

இதனால் ஐ.எஸ்.எல். ஒருங்கிணைப்பாளர்கள் தொடரின் இறுதிப் போட்டியை கொல்கத்தாவிற்கு மாற்றியுள்ளனர். அதேவேளையில் தொடக்க போட்டி கொச்சிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 9-ந்தேதி கொல்கத்தா – கேரளா அணிகள் மோதும் போட்டி கொச்சியில் இருந்து கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டுள்ளது. மற்றபடி பழைய அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஐ.எஸ்.எல். தொடரில் அட்லெடிகோ டி கொல்கத்தா, பெங்களூரு எஃப்.சி., சென்னையின் எஃப்.சி, டெல்லி டைனமோஸ், எஃப்.சி. கோவா, ஜாம்ஷெத்பூர் எஃப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி, வடகிழக்கு யுனைடெட் மற்றும் புனே சிட்டி அணிகள் இடம்பிடித்துள்ளன. இதில் பெங்களூரு எஃப்.சி, ஜாம்ஷெத்பூர் அணிகள் புதிதாக இந்த வருடம் சேர்க்கப்பட்டுள்ளன.

Leave a Response