மழை வெள்ளம் சூழ் சென்னை: களத்தில் முதல்வர்!

edappadi45rr-03-1509698930

சென்னை வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டு வருகிறார். ஆர்.கே. நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து நிவாரண பணிகளை முடுக்கி விட்டார். சென்னையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழையால் நகர் புறங்களிலும், புறநகர் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு வருகிறார். ஆர்.கே. நகர் தொகுதியில் நிவாரணம் மீட்பு பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் பழனிச்சாமி. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொட்டலங்களை வழங்கினார்.

முதல்வருடன் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் உடன் சென்றனர். இந்த நிலையில் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுவருவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு,நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 4 நாட்களில் கீழே விழுந்த 55 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார். இதனிடையே சென்னையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் இன்று மாலைக்குள் மின் சேவை சீராகும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தொடர் காரணமாக சென்னையின் 1541 வழித்தடங்களில் 128 வழித்தடங்களில் பாதுகாப்பு கருதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Response