நடிகர் சித்தர்த் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளிவந்த “ஜில் ஜங் ஜக்” படத்திற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் வாய்ப்புகல் கிடைக்காமல் இருந்தார் சித்தார்த். பின்னர் வேறு வழியின்றி மீண்டும் சொந்த தயாரிப்பில் இறங்கினார்.
இவர் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த போது அவருடைய நண்பராக இருந்த மற்றொரு உதவி இயக்குனர் மிலின்ட்டை வைத்து “அவள்” என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார். இந்தப் படத்தை ஒரே சமயத்தில் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் எடுத்ததாகச் சொல்கிறார்கள்.
தற்போது இப்படி சொல்வது பேஷன் ஆகிவிட்டது. எந்த ஒரு மொழியில் மட்டும் நேரடியாக எடுத்திருக்கிறார்கள் என்று படத்தைப் பார்த்தால்தான் தெரியும். தமிழில் “அவள்” என்ற பெயரில் இன்று வெளியாகும் இந்தப் படம், ஹிந்தியில் “தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்” என்ற பெயரில் வெளியாகிறது. தெலுங்கில் “குருஹம்” என்ற பெயரில் இன்று வெளியாவதாக இருந்த இந்தப் படம் வெளியிடுவதற்கு சரியான திரையரங்குகள் கிடைக்காததால் நவம்பர் 10ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சித்தார்த் நடித்த தெலுங்குப் படம் வெளியாகி சுமார் நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. அவரை ஏறக்குறைய தெலுங்குத் திரையுலகில் ஒதுக்கி வைத்துவிட்டனர். இன்று ஒரே சமயத்தில் தெலுங்கிலும் ரீ-என்ட்ரி கொடுக்கலாம் என்று எதிர்பார்த்த சித்தார்த்தின் ஆசை, நடக்காமல் போய்விட்டது.