பிரபல பின்னணி பாடகர்க்கும், பழம்பெரும் நடிகைக்கும் கர்நாடக அரசு வழங்கிய உயரிய விருது !

yesuth
கர்நாட மாநிலம் உருவாகி 62 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்த 62 பேருக்கு ராஜ்யோத்சவா விருது வழங்கி கர்நாடக அரசு கவுரவித்தது.

இதில் திரைப்படத்துறையிலிருந்து பழம்பெரும் நடிகை காஞ்சனாவும், பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாசும் இந்த விருதை பெற்றார்கள். பெங்களூவில் உள்ள ரவீந்திரா கலாஷேத்திராவில் நடந்த விழாவில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமய்யா இந்த விருதுகளை வழங்கினார்.

கர்நாடக கலை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் உமாஜி விருது பெறுகிறவர்களை அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு முதல்வர் சித்தராமய்யா ஒரு லட்சம் ரொக்கம், 20 கிராம் தங்கத்தில் செய்யப்பட்ட கேடயம், பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார். ஸ்ரீதர் இயக்கிய காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகமான காஞ்சனா, தமிழ், மற்றும் கன்னடத்தில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கே.ஜே.யேசுதாஸ் இந்திய மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

Leave a Response