“”கேலிக் கூடாரமாக’ மாறிப்போனது காங்கிரஸ்..” முதல் நாளில் பிரச்சாரத்திலேயே வெளுத்துவாங்கிய மோடி!

 

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர்களில் ஒருவரே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி இருக்கும்போது, ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சி ‘கேலிக் கூடாரமாக மாறிவிட்டது என்றுஇமாச்சலப் பிரதேச தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

சட்டசபைத் தேர்தல்:

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டசபைத் தொகுதிகளுக்கும், வரும் 9-ந்தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அங்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து, தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

fghdcvcaku-1463668880
பொதுக்கூட்டம்:

இமாச்சலப்பிரதேசத்தில் முதல்முறையாக பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கங்கரா மாவட்டத்தில் உள்ள ரேகான் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுக்கள் மோடியின் பேச்சைக் கேட்க திரண்டு இருந்தனர்.
முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமால், 7 தொகுதிகளின் வேட்பாளர்களை மேடையில் வைத்து பிரதமர் மோடி பேசியதாவது-

“நாளுக்கு நாள் காங்கிரஸ் கட்சி ‘கேலிக்கூடாரமாக மாறி வருகிறது’. அந்த கட்சியைச் சேர்ந்த ஒரு முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது, அவரும் பிணையில் இருக்கிறார். அப்படி இருக்கும்போது, அந்த கட்சி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்போம், ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று கூறி இருக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது நகைச்சுவையாக இருக்கிறது.

இமாச்சலப்பிரதேசத்தில் 5 கொள்ளை கூட்டங்களை வளர்த்துவிட்டதற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு ஏற்க வேண்டும். சுரங்கம், காடு அழிப்பு, ஒப்பந்தம், இடமாற்றம், போதை மருந்து ஆகியவற்றில் மிகப்பெரிய ‘மாபியா’ கும்பல் செயல்படுகிறது.

fa4b532ca319a4d190a17ffb80d9dcfe

மாநிலத்தில் உள்ள அரிய இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கிறார்கள், காடுகளில் மரங்களை அழிக்கிறார்கள், குறிப்பிட்ட சில வசதி படைத்தவர்களுக்குத்தான் அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன, பணி இடமாற்றத்துக்கு லஞ்சம் பெறப்படுகிறது. இந்த கொடூர சக்திகளிடம் இருந்து மாநிலத்தை மீட்டெடுப்பேன், மாநிலத்தை சுத்தமாக்குவேன் என உறுதி கூறுகிறேன்.

காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு முக்கியத் தலைவர்களையும் ஒவ்வொரு மாநில மக்களும் விட்டு விலகியும், ஒதுக்கியும் வருகிறார்கள். இது குறித்து காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மகாத்மா காந்தியின், சுதந்திரப்போராட்ட வீரர்களின் காங்கிரஸ் கட்சி இது அல்ல. இதில் இப்போது ஊழலும், வாரிசு அரிசியலும், சாதியமும் சேர்ந்து இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் 15 ஆண்டுகளாக(ராகுல் காந்தி) எம்.பி.யாக இருக்கிறார். ஆனால், எல்லையில் சீனாவுடன் டோக்லாம் பிரச்சினை இருக்கும்போது சீன தூதரைச் சந்தித்து பேசுகிறார்.

1b01c16a075593da9203083ba787ef9a

மாநிலத்தில் ஊழல் ஆட்சிபுரியும் காங்கிரஸ் கட்சியை இந்த மாநில மக்கள் அகற்றுவார்கள் என எனக்குத் தெரியும். இந்த கொடூர அரக்கர்களின் பிடியில் இருந்து விடுபட வேண்டும் தானே?.
இந்த மாநிலத்தில் உள்ள ராணுவ வீரர்கள் நாட்டுக்காக பல தியாகங்களைச் செய்துள்ளது அனைவருக்கும் தெரியும். காஷ்மீரில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் இங்குள்ள வீரர்கள் வீரமரணம் அடைகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரோ காஷ்மீருக்கு தன்னாட்சி கொடுக்க வேண்டும் என்கிறார்.
வரும் 9-ந்தேதி வாக்குப்பதிவின் போது, ஆண்களைக் காட்டிலும் பெண்கள் கூடுதலாக 5 சதவீதம் வாக்களித்தால் இந்த மாநிலத்தில் மாற்றம் கொண்டுவர முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response