முன்னாள் முதலவரின் கனவை நிறைவேற்றிய- முதல்வர்!

kovai1

கோவை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக கடந்த தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட காந்திபுரம் இரண்டு அடுக்கு மேம்பாலம் இப்போது, அ.தி.மு.க அரசால் ரூ.195 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இரண்டு் அடுக்கு மேம்பாலப் பணிகளில் பார்க் கேட் முதல் லட்சுமிபுரம் வரையிலான முதல் அடுக்குப் பாலத்தை முதல்வர் திறந்துவைத்துள்ளார்.

அப்போது பேசிய முதல்வர்,

“கோவையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேண்டும் என்கிற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு. அது இப்போது நிறைவேறியுள்ளது. மற்றொரு அடுக்கும் விரைவில் திறக்கப்படும்.

kovai

அதுமட்டுமல்ல, கோவையில் நடக்க இருக்கின்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கோவை மக்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. குறிப்பாக உப்பிலிபாளைத்திலிருந்து அரசு மருத்துவமனை வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 900 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் மற்றும் உக்கடம் ஆத்துப்பாலம் அருகே 120 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் உள்ளிட்டவை அமைப்பதற்கான அறிவிப்புகள் வரும், அதுமட்டுமல்ல இன்னும் நிறைய அறிவிப்புகள் இருக்கின்றன என்று சஸ்பென்ஸ் வைத்தார்.

மேலும், ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோவை மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

3-1

திட்டங்களைக் கிடப்பில் போடும் தி.மு.க அரசைப்போல அல்லாமல் உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதுதான் அ.தி.மு.க அரசின் நோக்கம்’ என்று தெரிவித்தார்.

Leave a Response