மெல்ல அழிந்து வரும் அரிய மருத்துவ குணங்களை கொண்ட இந்த மரத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

 

e47c5eee-687c-4f45-b01d-d80665f796f5

 

திருவாச்சி மரம் அல்லது மந்தாரை மரம், இளமஞ்சள் நிறத்தில் அழகிய மலர்களை உடைய, இளம்பச்சை நிற இலைகளைக் கொண்ட திருவாச்சி, இன்று மிக அரிதாகக் காணப்படும் ஒரு குறுமரமாகிவிட்டது. சிருவாச்சி, இருவாச்சி, திரு ஆத்தி, மந்தாரை எனப் பல பெயர்களில் அழைக்கப்படுவது போலவே, திருவாச்சி மரமும் பல விதங்களில் மனிதரின் வியாதிகள் தீர, மருத்துவப் பலன்கள் தருபவை. ஆன்மீகத்திலும், சித்த வைத்தியத்திலும் பெரும் பயனாகும், திருவாச்சி, தமிழ் சங்கீத இசை உலகிலும், வாத்தியங்களுக்கு இன்றியமையாத ஒரு துணையாகவும் விளங்குகிறது.

திருவாச்சி மரம், வல்லாரை இலைகளைப் போன்ற காம்புகளைச் சுற்றி படர்ந்த பசுமையான இலைகளைக் கொண்ட, குறு மரமாகும், திருவாச்சியின் மலர்களில் உள்ள, அதிக அளவு மகரந்தத்தையும், தேனையும் சுவைக்க தேனீக்களும், வண்ணத்துப் பூச்சிகளும் போட்டியிடுவதைக் காண்பதே, கண்களுக்கு விருந்தாக அமையும்.

இலை, மலர் மற்றும் பட்டை இவற்றின் மூலம், நலம் தரும் மருத்துவ பலன்களைக் கொண்டது, திருவாச்சி.

ஆன்மீகத்தில் திருவாச்சி!

திருக்கோவில்களில் தல மரமாக விளங்கும் திருவாச்சி மரங்களின் இலைகள், வில்வ இலைகளைப் போல, சிவபெருமானுக்கு உகந்தவையாகக் கருதப்படுபவை. திருவாச்சி மலர்களும், சிவ பூஜைக்கு உகந்த மலர்களாகின்றன. திருக்கோவில்களில் அகல்களில் விளக்கேற்றும் போது, அகல்களின் கீழே, அந்தந்த நாட்களுக்கு விஷேசமாகக் கருதப்படும் இலைகளைக் கொண்டு, விளக்கேற்றுவர்.

அந்த வகையில், சிவபெருமானுக்கு உகந்த சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில், திருவாச்சி இலைகளின் மேலே, அகலில் தீபம் ஏற்றி வைத்து வழிபட, நலமாகும். காற்றுவெளியை நலமாக்கும் திருவாச்சி மரத்தை வீடுகளில் வளர்த்து வர, ஆன்மீக வளத்தோடு, ஆரோக்கியமான வாழ்க்கை நலத் தீர்வுகளும் கிடைக்கும்.

உடலுக்கு நலம் தரும் திருவாச்சி மரம், வயிறு தொடர்பான அனைத்து பாதிப்புகளுக்கும் நிவாரணம் தரும், கை கால் வலிகளைப் போக்கும் தன்மை மிக்கது, உணவை உண்ணப் பயன்படும் வாழை இலைகளைப்போல திருவாச்சி இலைகள் பயன் தந்து, மனிதர்களின் உடல் மன வியாதிகளைப் போக்கும் இயல்புடையது, திருவாச்சி இலைகள். இரத்த பேதி, இரத்த வாந்தி, மலச்சிக்கல் போக்கும் ஆற்றல் உள்ளவை.

திருவாச்சி பூக்களின் மொட்டுக்களை நன்கு அலசி, ஒரு லிட்டர் நீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த நீர் கால் லிட்டர் அளவில் சுண்டி வந்ததும், எடுத்து வைத்துக் கொண்டு, காலை மாலை இருவேளை, இருபது அல்லது முப்பது மிலி அளவு பருகி வர, சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் புண்கள் ஆறும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதீத இரத்தப் போக்கு குணமாகும். இரத்த மூல பாதிப்புகள் விலகும்.

செவ்வண்ண நிறங்களில் காணப்படும் சில வகை திருவாச்சி மலர்களை, நிழலில் உலர்த்தி பொடியாக்கி, உள்ளங்கை அளவு அந்த பொடியை எடுத்து, அதில் பனங் கற்கண்டு, தேன் கலந்து சாப்பிட, நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்புகள் அகன்று, வயிறு சுத்தமாகும்.

திருவாச்சி மரப்பட்டையை பொடியாக்கி, நீரில் நன்கு கொதிக்க வைத்து, மூன்றில் ஒரு பங்கு அளவாக நீர் சுண்டியதும், பருகி வர, உணவு செரிமானக் கோளாறால் ஏற்படும் வயிற்றுப் போக்கு பாதிப்புகள் குணமாகும். மேலும், தசையை வலுவாக்கி, இரத்தப் போக்கை நிறுத்தி, உடலை வியாதிகளின் பாதிப்பில் இருந்து தேற்றி, உடலை வலுவாக்கும், இயல்பு மிக்கது.

மனிதரின் சுவாசப் பிரச்னைகள், வாத பாதிப்புகளால் ஏற்படும் கைகால் வலிகள், இதய பாதிப்புகள் உள்ளிட்ட பல வகை உடல் நலக் கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாக, திருவாச்சி இலைகளின் வைத்தியம் விளங்குகிறது. திருவாச்சி இலைகளை துவையலாக செய்து உணவுடன் கலந்து சாப்பிடுவதன் மூலம், மேற்சொன்ன பாதிப்புகள் நீங்கி, உடல் நலம் சீராகப் பெறலாம்.

தேவை: நன்கு அலசிய திருவாச்சி இலைகள் ஒரு கைப்பிடி அளவு, புளி சிறிதளவு, சிறிய வெங்காயம் நான்கு, பச்சை மிளகாய் நான்கு மற்றும் இந்துப்பு

தேவையான அளவு:

நன்கு அலசிய திருவாச்சி இலைகளை வாணலியில் இட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு சிறிய வெங்காயம், பச்சை மிளகாயை வாணலியில் இட்டு வதக்கி எடுத்து வைத்துக் கொண்டு, வதக்கிய திருவாச்சி இலைகள், சிறிய வெங்காயம், பச்சை மிளகாய், புளி மற்றும் இந்துப்பை சேர்த்து, சிறிது நீர் விட்டு அம்மியில் வைத்து அரைத்து எடுக்க, கறிவேப்பிலை போன்ற நறுமணத்துடன் அற்புதச் சுவைமிக்க திருவாச்சி துவையல் கிடைக்கும்.

இதை உணவுடன் தொட்டு சாப்பிட ஏற்றதாக அமையும். அனைத்து வகை உணவுக்கும் சிறப்பான இணையாக இருக்கும் திருவாச்சி துவையல், தயிர் சாதத்துடன் கலந்து உண்ண கூடுதல் சிறப்புமிக்க இணையாக அமையும். சுவைமிக்க இந்த துவையலை, அம்மியில் அரைக்க வாய்ப்பு இல்லாதவர்கள், மிக்சியில் அரைக்கலாம், கூடுதல் சுவை தேவைப்படுபவர்கள் தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம். உடல் வியாதிகள் போக்கி, உடலுக்கு மிக்க வலு சேர்க்கும் திருவாச்சி துவையலை, அனைத்து வயதினரும் சாப்பிட்டு வர, உடல் நலமாகும்.

சுத்தம் செய்யப்பட திருவாச்சி இலைகளை அரைத்து சாறெடுத்து, அந்தச் சாற்றுடன் நன்கு இடித்த சிறிதளவு இஞ்சியை சேர்த்து அத்துடன் சிறிது பனங்கற்கண்டை கலந்து, முன்னூறு மிலி தண்ணீரில் சுட வைத்து, சுண்டியபின் இறக்கி ஆற வைக்கவும்.

இந்தக் குடிநீரை தினமும் இருவேளை பருகி வர, காரமான உணவுகள், நேரந்தவறிய உணவுகளால் ஏற்பட்ட வயிற்றுப் புண்கள் யாவும், தீரும். மேலும், வயிற்றுப் புண் வராமலும் காக்கும், உணவு செரிமானத்தை தூண்டி, வயிற்றை சீராக்கும். மேலும், வயிற்றில் உள்ள பூச்சிகளையும் வெளியேற்றும் தன்மை மிக்கது, ஜுரம், கைகால் மூட்டு வலிகளைப் போக்கும்.

மந்தாரை இலைகள் என அழைக்கப்படும் திருவாச்சி இலைகளில் உணவை உண்டு வர, பசியின்மை பாதிப்பை போக்கும், பல வகை உடல் பாதிப்புகள் விலகும். ஈர்க்குச்சிகளால் இணைக்கப்பட்ட மந்தாரை இலைகளில் சாதத்தை இட்டு, அதில் தயிரை ஊற்றி பிசைந்து, திருவாச்சி துவையலுடன் சாப்பிட்டு வர, அனைத்து வகையான குடல் வியாதிகள் விரைவில் விலகும்.

திருவாச்சி இலைகளின் மேல் விளக்கெண்ணை தடவி, பின் அவற்றை சூடான தணலில் வாட்டி, அடிபட்ட காயம், அடிபட்ட வீக்கங்கள் இவற்றின் மேல் வைத்து கட்டி வர, இரண்டு மூன்று மணி நேரங்களில் அடிபட்ட இடங்களில் உள்ள வீக்கங்கள் குறைந்து, தசைகளில் உள்ள காயங்களில் ஏற்பட்ட வலி நீங்கும்.

சமீப காலங்களில் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடைகள் விதிப்பதன் காரணமாக, சில சுற்றுலா மையங்களில், உணவைக் கட்டிக் கொடுப்பதில், மந்தாரை இலைகள் அதிக அளவில் பயனாகின்றன.

கச்னார் என வடமொழியில் அழைக்கப்படும் இந்த இலைகளின் மருந்துப் பொருட்கள் சரும வியாதிகளைப் போக்கவும், சுவாச பாதிப்புகளால் ஏற்படும் தொண்டை வலி போன்ற கோளாறுகளையும் சரிசெய்பவை.

சிறிது திருவாச்சி மலர்களை முன்னூறு மிலி தண்ணீரில் சுடவைத்து, சுண்டியபின் பனங்கற்கண்டு சேர்த்து பருகி வர, சீரற்ற மாதவிலக்கு முறையாகும், கருப்பை வளமாகும், சளியை வெளியேற்றும், கைகால் மூட்டு வலிகளைப் போக்கும்.

ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணை சிறிது ஊற்றி, அதில் திருவாச்சி மலர்களை இட்டு, நன்கு காய்ச்சி ஆறியபின், உறங்கப் போகும் வேளையில், கண்களைச் சுற்றி தடவி வர, கண்களை ஒட்டி இருந்த கருவளையம் நீங்கி விடும், கண்களின் சிவந்த நிறம் மாறி, கண்களின் வெம்மை நீங்கி, குளிர்ச்சி உண்டாகும்.

பெரும்பான்மை பெண்களை பாதிக்கும் தைராய்டு வியாதிகளை போக்கும் ஆற்றல் மிக்கது, திருவாச்சி மலரின் மொட்டுக்கள், பெண்களின் உடல்நிலை மற்றும் மனநிலையில் பெரும்பாதிப்புகள் ஏற்படுத்தும், தைராய்டு கோளாறுகளை சரிசெய்யும்.

திருவாச்சி வேரை நீரில் கொதிக்க வைத்து, நன்கு சுண்டியதும் தினமும் பருகி வர, உடல் எடை வெகுவாக குறையும்.

தமிழில் பழம்பெருமை வாய்ந்த மங்கள வாத்திய இசைக்கருவிகளில் சிறப்பிடம் மிருதங்கம் என அழைக்கப்படும் தவிலுக்கு உண்டு. வலையப்பட்டி சுப்பிரமணியன், ஹரித்வாரமங்கலம் பழனிவேல் போன்ற ஜாம்பவான்கள்,

நாதஸ்வரத்தோடு இணைந்து, தவிலில் மெய்மறக்கச் செய்யும் இன்னிசையை வாசித்து, மக்களுக்கு நல்ல பாரம்பரிய இசையை அளித்து, சாதனைகள் பல படைத்தவர்கள். வலது இடது எனும் இரு புறங்களைக்கொண்ட தவில் வாத்தியத்தில், பொதுவாக வலது புறம் கைகளால் வாசிக்கும் வண்ணமும், இடது புறம் கைகளில் சிறிய குச்சிகளைக் கொண்டு வாசிக்குமாறும் அமைந்திருக்கும்.
இடது புறம் வாசிக்க, தவில் வித்வான்களின் கைகளில் இருக்கும் குச்சி, திருவாச்சி மரத்தில் இருந்து செய்யப்படுவது ஆகும். மிகுந்த கலை நுணுக்கத்துடன் உருவாகும் இந்த தவில் குச்சியை, திருவாச்சி மரத்தில் இருந்து செய்வதற்கு, திருவாச்சி மரத்தின் எளிதில் உடையாத, மிகவும் வலிமையான அமைப்பே, காரணமாகும்.

1 Comment

Leave a Response