கரும்பு விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக்கும் தமிழக அரசு : பெரம்பலூர் சர்க்கரை ஆலை ரூ.33 கோடி பாக்கியை விரைந்து வழங்க கோரிக்கை!

201703220429028044_In-Chennai-sugarcane-farmers-protest_SECVPF

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு கூட்டம் துறைமங்க லத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் வரதராஜன், துணைத் தலைவர்கள் ராஜேந்திரன், இளையராஜா, தங்கராஜ், ஜானகிராமன், துணைச்செயலாளர்கள் செல்வராஜ், காமராஜ், பாண்டியன், ஞானசேகரன் முன்னிலை வகித்தனர். மாநில துணைச்செயலாளர் ஏகே. ராஜேந்திரன் பேசியதாவது :
தமிழ்நாடு அரசுடன் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதில், தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2015- 16ம் ஆண்டுக்கு தரவேண்டிய கரும்பு பாக்கிப்பணம் ரூ.125 கோடி, 11கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு 2015-16, 2016-17 ஆகிய ஆண்டுகளுக்கு தரவேண்டிய ரூ.208 கோடியில் ஒரு வருடப் பணமாக ரூ.104 கோடியையும் தராதது ஏமாற்றம் அளிக்கிறது.

சங்கம் சார்பாக கள் ளக் குறிச்சியில் நவம்பர் 13ம் தேதியும், திருத்தணியில் 27ம்தேதியும், ஈரோட்டில் 19ம்தேதியும், மதுரையில் 30ம் தேதியும், கடலூரில் 14ம்தேதியும் சுற்று வட்டாரங்களில் இருந்து பலஆயி ரம் கரும்பு விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. பெரம்பலூர் சர்க்கரை ஆலை 9ஆயிரம் விவசாயிகளுக்குத் தரவேண்டிய மாநிலஅரசின் பரிந்துரைவிலை ரூ.33 கோடி பாக்கிப்பணத்தை விரைந்து வழங்கவேண்டும். வருவாய் பங்கீட்டுத் தொகையை அமல்படுத்தக் கூடாது. மத்தியஅரசின் குறைந்த பட்ச ஆதாரவிலை, மாநில அரசின் பரிந்துரை விலையை தாமதமின்றி வழங்க வேண்டும் என்றார் . அகரம் சீகூர் பெருமாள் நன்றி கூறினார்.

Leave a Response