சிகிச்சை பலனின்றி இசக்கி முத்து உயிழப்பு: தீக்குளித்த நால்வரும் இறந்த பரிதாபம்!

 

xfamily-attempt-self-immolation-at-tirunelvely-district-collector-s-office21-25-1508918673.jpg.pagespeed.ic.QyxgzVaM_s

கந்து வட்டி பிரச்சினை காரணமாக தீ குளித்த இசக்கி முத்து இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயிரிழந்துள்ளது.

காசி தர்மத்தைச் சேர்ந்த இசக்கி முத்து சுப்புலட்சுமி தம்பதியர் தங்களின் இரண்டு குழந்தைகளுடன் நேற்று முன் தினம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். தங்களின் கைகளில் வைத்திருந்த மண்ணெண்ணையை குழந்தைகள் உடம்பில் ஊற்றிவிட்டு தங்களின் உடம்பில் ஊற்றிக்கொண்டு தீ வைத்தனர். இதனைக்கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சுற்றியிருந்தவர்கள் மண்ணை போட்டு தீயை அணைத்தனர். அங்கிருந்த வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ குளித்த 4 பேரும் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் திங்கட்கிழமையன்றே சுப்புலட்சுமியும், இரண்டு குழந்தைகள் மகள்கள் மதி சரண்யா, அட்சய பரணிகா ஆகியோர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் கந்து வட்டி கொடுமைக்கு எதிராக பலரையும் குரல் கொடுக்க வைத்தது. இந்த நிலையில் இன்று பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இசக்கி முத்துவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கந்து வட்டி கொடுமையால் தீயின் கோர பசிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Response