கந்துவட்டிக்கு எதிராக போராட்டம்: நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவி கைது!

800x480_f5d48b9f17ea85bc61bf2a706f6711ab

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரம் இருக்க முயன்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினியை போலீசார் கைது செய்தனர்.

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி, தன் மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளித்தனர். இந்த சம்பத்தில் தாய், இரு குழந்தைகள் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கந்துவட்டி கொடுமைக்கு எதிராக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவி நந்தினி தனது தந்தையுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று திடீரென உண்ணாவிரதம் இருக்க முயன்றார்.

ஆனால் அவர்களது உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுத்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

 

Leave a Response