இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி: மீண்டெழுமா இந்தியா?

fc2abd2b-b545-4db6-b825-8a0f7f56e26c

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, புனேவில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முமபை வாங்கடே மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தது. கேப்டன் விராத் கோஹ்லி 121 ரன் விளாசியும், நியூசி. வெற்றியை தடுத்து நிறுத்த முடியவில்லை.
281 ரன் என்ற கடினமான இலக்கை துரத்திய நியூசி. அணிக்கு ராஸ் டெய்லர் – டாம் லாதம் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 200 ரன் சேர்த்து வெற்றியை வசப்படுத்த உதவியது. டெய்லர் 95 ரன், லாதம் 103* ரன் விளாசினர். வாரியத் தலைவர் லெவன் அணிக்கு எதிரான 2வது பயிற்சி ஆட்டத்தில் இவர்கள் இருவரும் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0b6ff650-fad1-4e07-a18d-826875f19171

நியூசிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி புனே மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. மும்பையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்துடன் இந்தியா களமிறங்குகிறது. தொடக்க வீரர்கள் ரோகித், தவான் இருவரும் வலுவான அடித்தளம் அமைப்பது அவசியம். நடுவரிசையில் கார்த்திக், டோனி பொறுப்புடன் விளையாடினாலும், அதிமான பந்துகளை வீணடித்தனர். இதனால் இந்திய ஸ்கோர் 300 ரன்னை எட்ட முடியாமல் போனது. ரன் குவிப்பு வேகத்தில் இவர்கள் கவனம் செலுத்துவது அவசியம். குல்தீப், சாஹல் சுழல் கூட்டணி விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தால் மட்டுமே நியூசி. அதிரடியை கட்டுப்படுத்த முடியும். நியூசி.க்கு எதிராக நடப்பு தொடரில் ஹாட்ரிக் வெற்றி பெற்றிருந்தால், ஐசிசி தரவரிசையில் தென் ஆப்ரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. மும்பையில் தோல்வியைத் தழுவியதால் அந்த வாய்ப்பை நழுவவிட்ட இந்திய அணி, புனேயில் வெற்றியை வசப்படுத்து பழிதீர்த்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

508bd9c7-d9e7-47c5-becd-0c052e9800bf

அதே சமயம், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசி. வீரர்கள் முதல் போட்டியில் கிடைத்த வெற்றியால் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். போல்ட், சவுத்தீ, சான்ட்னர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதும் அந்த அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. பதிலடி கொடுக்க இந்தியாவும், தெரடரை வெல்ல நியூசிலாந்தும் வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், அஜிங்க்யா ரகானே, மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.டோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர்.நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டாம் புரூஸ், கோலின் டி கிராண்ட்ஹோம், மார்டின் கப்தில், மேத்யூ ஹென்றி, டாம் லதாம், ஹென்றி நிகோல்ஸ், ஆடம் மில்னி, கோலின் மன்றோ, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தீ, ராஸ் டெய்லர், ஜார்ஜ் வொர்க்கர், ஈஷ் சோதி.

Leave a Response