பல வருடங்களுக்குப்பிறகு மாறப்போகும் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 பாடத்திட்டங்கள்: சர்வதேச தரத்தில் உருவாகிறது!

ch_2867902f

 தமிழகத்தில் 2018ம் கல்வியாண்டில் முதற்கட்டமாக 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை சர்வதேச தரத்தில் உருவாக்கும் பணியில் தமிழக பள்ளி கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் 2008ம் ஆண்டு வரை 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில கல்வி திட்டம் செயல்பட்டு வந்தது. இந்த பாடத்திட்டத்தை மாற்றி அரசு பள்ளி, தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஒரே சீரான கல்விமுறை கொண்டு வரும் வகையில் கடந்த 2009ம் ஆண்டு சமச்சீர் கல்வித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு பாடச்சுமையை குறைக்க கடந்த 20112012ம் ஆண்டு முதல் சமச்சீர் கல்வித்திட்டம் அதே பாடத்திட்டங்களுடன் முப்பருவ கல்வி முறையாக மாற்றப்பட்டது.

sengottaiyan1_13418

இந்நிலையில் அகில இந்திய தகுதித்தேர்வுகள், போட்டித்தேர்வுகள், மத்திய அரசுப்பணி தேர்வுகளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்வதில் மற்ற மாநில மாணவர்களை விட பின்தங்கியிருப்பதாக கூறப்பட்டது. எனவே, அதற்கேற்ப தமிழக மாணவர்களை தயார்படுத்தும் வகையில் சிபிஎஸ்இ மற்றும் சர்வதேச தரத்தினாலான புதிய பாடத்திட்டத்தை கொண்டு வர தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து, அதற்கான பணிகளை தற்போது தொடங்கி உள்ளது.
இதில் அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு நிகராக புதிய பாடத்திட்டம் 2018ம் கல்வியாண்டு முதல் கொண்டுவரப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தை உருவாக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் திறன்மிகு ஆசிரியர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதோடு புதிய பாடத்திட்டத்தை உருவாக்க 17 அதிகாரிகள் தலைமையில் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

2018ம் கல்வியாண்டில் தமிழகத்தில் முதற்கட்டமாக 1, 6, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்டத்தை மாற்றி புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த பாடத்திட்டம் வெளிநாடுகள் மற்றும் சில மாநில பாடத்திட்டங்களை ஆய்வு செய்து, அவற்றில் உள்ள தேவையான அம்சங்களை உள்ளடக்கி சர்வதேச தரத்தில் அமைந்திருக்கும். இதற்காக 4 வெளிநாடுகள் மற்றும் 2 மாநிலங்களின் பாடத்திட்டங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதில் அதிகளவில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை போல் கொண்டுவர கமிட்டிகள் முடிவு செய்துள்ளது. 2019ம் கல்வியாண்டில் இரண்டாவது கட்டமாக 3 வகுப்புகளுக்கும், 2020ம் கல்வியாண்டில் 3வது கட்டமாக 3 வகுப்புகளுக்கும் 3 ஆண்டுகளுக்குள் புதிய பாடத்திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Leave a Response