பைரசிக்கு எதிராக குரல் கொடுத்தால் ரைய்டு நடத்தி குரல்வளையை நெறிப்பதா? மத்திய அரசின் அடாவடித்தனம்!

mersal

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியது.

மேலும், தமிழ் திரைப்பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் மெர்சலுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பா.ஜ.க தேசிய தலைவர் எச்.ராஜா மெர்சல் திரைப்பட காட்சிகளை இணையதளத்தில் பார்த்ததாக பேசியிருந்தார்.

அதற்கு நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், மெர்சல் திரைப்படத்தை இணையதளத்தில் பார்த்ததாக எச்.ராஜா பேசியிருப்பது வேதனை அளிக்கிறது. பைரசி எனப்படும் திருட்டுக்குற்றத்தை சட்டபூர்வமாக அரசுகள் ஆக்கிவிட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என விஷால் வலியுறுத்தியிருந்தார்.

201710231655042462_Vishal-Production-Company-GST-Ride_SECVPF

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் மெர்சல் படத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்க்காக  மத்திய அரசு அடாவடித்தன நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.  வட பழனியில் உள்ள நடிகர் விஷாலின் அலுவலகத்தில் மத்திய கலால் துறையின் கீழ் செயல்படும் ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவினர் சோதனை கடந்த 3 மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இணையத்தில் படம் பார்ப்பது என்ற தவறான காரியத்தை சுட்டிக்காட்டியதற்காக அவரை மிரட்டும் தொனியில் இன்று அவர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு பயமுறுத்த எத்தனிக்கிறார்கள். நாட்டில் கருத்துச்சுதந்திரம் என்பது கழுத்தை நெரிக்கும் அளவிற்குதான் உள்ளது. ஆளும் பாஜக அரசு அனைத்து தரப்பிலும் தங்களுக்கு எதிராக கருத்துச்சொல்பவர்களை ஒடுக்க முயற்சிக்கிறது.

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். விமர்சிப்பவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சியா என்ற சந்தேகமும் எழுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்

Leave a Response