கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளித்த தாய் ,மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு : சஸ்பெண்ட் ஆவார்களா? காவல்துறை அதிகாரிகள்!

 

e0dacf94-6dc8-4636-9239-ee1f98ee17e8

நெல்லையில் குடும்பத்துடன் தீக்குளித்த பெண் சுப்புலட்சுமி உயிரிழந்தார். கந்துவட்டி தொல்லையால் இசக்கிமுத்து மனைவி, 2 குழந்தைகளுடன் தீக்குளித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இசக்கிமுத்து மனைவி சுப்புலட்சுமி உயிரிழந்தார். சுப்புலட்சுமியின் மகள் மதிசாருண்யாவும் (4) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கடையநல்லூர் அருகேயுள்ள காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து, தனது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் 5 வயது மதிசரண்யா, ஒன்றரை வயதுள்ள அட்சய பரணியா ஆகியோர்  நெல்லை கத்தில்  மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற அரங்கு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு கந்து வட்டிதான் காரணமாக அமைந்துள்ளது. எதிர் தரப்பை சேர்ந்தவர்களுக்கு கடையநல்லூர் காவல்நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரியும் முருகன், ஏட்டு தங்கத்துரை ஆகியோர் ஆதரவாக இருந்துள்ளனர். இவர்கள் எதிர்தரப்பை சேர்ந்தவர்களிடம் பணத்தை வாங்கி கொண்டு கட்டப்பஞ்சாயத்து பேசியுள்ளனர். இசக்கிமுத்து மற்றும் அவரது குடும்பத்தை அவமரியாதையாக பேசி மிரட்டியுள்ளனர். பத்திரத்திலும் கையெழுத்து போடுமாறு தொந்தரவு செய்துள்ளனர். இதுகுறித்து எஸ்.பி.அருண்சக்தி குமார் ்விசாரணை நடத்தி வருகிறார். சம்பந்தப்பட்ட சப்.இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்பட இதில் தொடர்புடைய போலீசார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

நெல்லைமாவட்ட  ஆட்சியர்  சந்தீப்நந்தூரி தீவிபத்தில் உயிழந்தவர்களை காண  மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

 

Leave a Response