தார் கொள்முதல் ஊழல் : தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு!

 

large_vgl-31671

தமிழக நெடுஞ்சாலை துறையால் மொத்தம் 57,043 கி.மீ. நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலைகளை அமைக்க, பராமரிக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து தார் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட தாரின் விலை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாதாமாதம் மாறுபடுகிறது. இதை அடிப்படையாக வைத்து தார் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதில் இருக்கும் சாதகமான அம்சங்களை பயன்படுத்தி நெடுஞ்சாலைத் துறையில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்ததாகக் கூறி சென்னை ஐகோர்ட்டில் இந்த ஊழலை விசாரிக்க மத்திய புலனாய்வுத் துறையை (சி.பி.ஐ.) நியமிக்கக்கோரி பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

 

அந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. .

2014-2015, 2015-2016-ல் மட்டும் ரூ.800 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சாலைக்கு தேவையான தார் விலை குறைந்த போதும் அதிக விலைக்கு வாங்கியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாக வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a Response