பொறையார், மயிலாடுதுறை,சீர்காழி பேருந்து நிலையத்தில் ஊழியர்கள் போராட்டம்!

20-1508477006-xnagai-transport-building-collapse--8-killed-20-1508465032-jpg-pagespeed-ic-ihtf-ddins

நாகை மாவட்டம் பொறையாரில் பேருந்து பணிமனை கட்டடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தரங்கம்பாடி அருகில் உள்ள பொறையார் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையின் ஓய்வறையில் பணிமுடித்த நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்கள் 20 பேர் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணியளவில் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடினர். தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

 

இந்த விபத்தில் 8 பேர் 4 ஓட்டுநர்கள், 3 போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் நடத்துனர் ஒருவர் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டு காயம் அடைந்த சிலர் மீட்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பணிமனை கட்டட விபத்து நடந்த இடத்தில் நாகை மாவட்ட ஆட்சியர் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பொறையார் கட்டட விபத்து தொடர்பாக விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று நாகை ஆட்சியர் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆய்வு மேற்கொண்டார்.

இதற்கிடையே தமிழகத்தில் பழைய கட்டடங்களில் இயங்கும் பணிமனைகள் மாற்றப்படும் என்றும் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்றும்  ஆர். விஜய பாஸ்கர் தெரிவித்தார். சென்னையில் இருந்து நாகை மாவட்டம் பொறையாறுக்கு அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் விரைந்துள்ளார்.

 

இந்த விபத்தில் இறந்தவர்களின் விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
1. நாகை, திருக்குவளை மணக்குடியை சேர்ந்த அன்பரசன்
2. புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த தனபால்
3. நாகை, தரங்கம்பாடி தாலுகாவை சேர்ந்த பிரபாகரன்
4. நாகை, தரங்கம்பாடி தாலுகா கீழையூரை சேர்ந்த சந்திரசேகரன்
5. நாகை, கீழபெரம்பூரை சேர்ந்த முனியப்பன்
6. நாகை, காளகஸ்திநாதபுரத்தை சேர்ந்த பாலு
7. நாகை, சிக்கல் தெற்கு வீதியை சேர்ந்த ராமலிங்கம் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து சீர்காழி பேருந்து நிலையத்தில் ஊழியர்கள் , பஸ்களை இயக்காமல் நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். பொறையார் மற்றும் மயிலாடுதுறை பணிமனைகளில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படவில்லை.

Leave a Response