அடுத்த ஆண்டு தீபாவளிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்:

subramaniam_swamy

பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பல்வேறு தடைகள் இருந்தன. அந்த தடைகள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு வருகிறது. விரைவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் மிகச் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வாரம் நாம் தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளோம். அடுத்த ஆண்டு தீபாவளிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்.

அடுத்த தீபாவளிக்கு பக்தர்களை வரவேற்க ராமர் கோவில் தயாராகி விடும்.

வடக்கு பீகாரில் உள்ள சீதாமர்கி எனும் இடம் சீதை பிறந்த இடமாகும். அங்கு சீதைக்கு பிரமாண்ட கோவில் கட்டப்படும்.

அங்கு ஒரு பல்கலைக் கழகமும் உருவாக்கப்படும். இந்தியாவின் பாரம்பரிய சிறப்பை அந்த பல்கலைக் கழகம் மூலம் தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும்.

இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி கூறினார்.

Leave a Response