அன்றைய வட சென்னையின் ஸ்ட்ரீட் பைட் இப்போது படமாகிறது…

Vaandu
அறிமுக இயக்குனரான வாசன் ஷாஜி “வாண்டு” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் செல்வராகவன் உதவியாளராகவும், சில முன்னனி இயக்குனர்களிடம் இணை இயக்குனராகவும் பனியாற்றியுள்ளார்.

“வாண்டு” வட சென்னையில் 1970 – 1971’ல் நடந்த ஸ்ட்ரீட் பைட்டில் நடந்த உண்மை சம்பவத்தினை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் இந்த “வாண்டு”.

இந்த கதையில் இரு கதாபாத்திரங்கள். அதில் ஒன்று ஹீரோ அப்பா முருகன் மற்றொன்று வில்லன் அப்பா மஹா காந்தி. இவர்கள் ஒருத்தரை ஒருத்தர் மோதி கொள்ளும் கிக் பாக்சிங் போட்டியில் ஹீரோவின் அப்பா முருகன் வில்லனால் தாக்கப்பட்டு மனநலம் பாதிக்கப்படுகிறார். ஐந்து வருடங்கள் கழித்து, அன்று போட்டியில் வெற்றிபெற்ற வில்லனின் மகன் பயிற்சிப்பெறும் கிக் பாக்சிங் பள்ளியில் ஹீரோவும் கிக் பாக்சிங் கற்றுக்கொள்ள வருகிறார். பயிற்சியில் இவர்களுக்குள் விரோதம் ஏற்படுகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத வில்லன் மஹா காந்தி ஹீரோவுக்கு இடையூறு செய்கிறார். இந்த விஷயம் இரண்டாவது ஹீரோவின் கிக் பாக்சிங் மாஸ்டருக்கு தெரியவருகிறது. விஷயம் அறிந்த மாஸ்டர் ஹீரோவிற்கு அதிக பயிற்சி கொடுக்கிறார். பயிற்சி பெற்ற ஹீரோ, வில்லன் மஹா காந்தியின் மகனுடன் வட சென்னையில் ஒரு பெரிய ஸ்டேட் பைட்டில் ஈடுபடுகிறார். இந்த சண்டையில் இருவருக்குள் ஏற்படும் விரோதத்தால் இவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பது தான் மீதி கதை.

இப்படத்தில் தடையறதாக்க மற்றும் கொம்பன் மஹா காந்தி, ‘மெட்ராஸ்’ புகழ் ரமா, ‘தெறி’ சாய் தீனா, ‘ரோமியோ ஜூலியட்’ புவனேஸ்வரி, 2.0 வில் நடித்துக்கொண்டிருக்கும் ரவிசங்கர், ‘வின்னர்’ பட தயாரிப்பாளர் ராமசந்திரன், முருகன், இவர்களுடன் அறிமுக நாயகன் சீனு, S.R.குணா, ஆல்வின், கதாநாயகியாக ஷிகா ஆகியோர் நடிக்கின்றனர். பாடல்களை மோகன் ராஜன் எழுத A.R.நேசன் இசையமைத்துள்ளார். கலை பணியை J.P.K.பிரேம் மேற்கொள்ள, ஒளிப்பதிவை ரமேஷ் மற்றும் V.மஹேந்திரன் ஆகியோர் கையாண்டுள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை வாசன் ஷாஜி கையாள படத்தொகுப்பு மூலமாக நச் என்று கத்திரித்துள்ளர் படத்தொகுப்பாளர் ப்ரியன். நடன காட்சிகளை பாபி அன்டனியும், சண்டைப்பயிற்சியை ஓம் பிரகாஷ் இயக்கியுள்ளனர். எம்.எம்.பவர் சினி கிரியேஷன் சார்பாக வாசன் ஷாஜி இப்படத்தினை தயாரித்துள்ளார். இவருடன் இணை தயாரிப்பாளராக டத்தோ N முனியாண்டி இணைந்துள்ளார்.

Leave a Response