கல்விக்கண் திறந்த கருமைச்செம்மலின் நினைவு தினம் இன்று!

 

1-J1qIiSFQ0pSE__t0jRLuGg

தமிழக அரசியலின் பிதாமகர், எளிமை அரசியலுக்குக்கான முதற்முழு முன்னோடி, கருப்பு காந்தி, கல்வி கண் திறந்த காமராசர் அவர்களின் நினைவுதினம் இன்று .

ஏழைப் பங்காளனாக, படிக்காத மேதையாக மக்களின் நாயகனாக இருந்தவர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் அய்யா காமராசர் அவர்கள்.

1954-இல் தமிழ்நாட்டு முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மாணவர்கள் படிக்க வேண்டும் என்று மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் .பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று கல்வியை அரசுடமையாக்கி பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். காமராஜ் 1903-ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் பிறந்தார் அணைகள் பல கட்டி விவசாயத்திற்கு சிறப்பான வழிகாட்டியாக இருந்தார். நாட்டில் கல்வி வளர மிகுந்த திட்டங்களை தீட்டினார் . நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்கும் தகுதியும் பெற்றார் ஆனால் அதனை விடுத்து பிரதமர்களை உருவாக்கினார் .

மிகச்சிறந்த தலைவராக மனிதராக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். ஆடம்பர வாழ்க்கையை விடுத்து அனைத்து மக்களின் நலனுக்கு உதவிகரமாக இருந்தார் . “கிங் மேக்கர்” எனவும் பெருமிதத்துடன் அழைக்கப்பட்டவர் காமராசர் . சுதந்திர போராட்ட காலம் முதல் நாடு விடுதலை அடைந்தது வரை சிறப்பான தேசியப்பணியாற்றிய தலைவர். காமராசரின் அரசியல் குரு சத்திய மூர்த்தி ஆவார். காமராஜர் காலத்தில் குறைந்தஆட்சி செலவே செய்தார் 8 அமைச்சர்கள் மட்டுமே காமராஜ் கொண்டிருந்தார்.

indira_kamaraj_morarji

27000-பள்ளிகளை திறந்து கல்வி கற்போரின் எண்ணிக்கை உயர்த்தியவர். இந்திய தொழில்நுட்ப கல்லுரி நிறுவனம், பவானி திட்டம் , மேட்டூர் கால்வாய் திட்டம் , காவிரி டெல்டா திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தணுர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகியவை அவர் காலத்தில் உருவாக்கப்பட்டதே ஆகும். இவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலம் இன்றவும் ஆசியாவிலேயே புகழ் பெற்று விளங்குகிறது.

மேட்டூர் காகித தொழிற்சாலை, பெல் நிறுவனம், நெய்வேலி சுரங்க தொழிற்சாலைகள், கிண்டி மருத்துவ சோதனை கருவிகள் தொழிற்சாலை அனைத்தும் இவரது ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டதே ஆகும்.

“கே பிளான்” கொண்டு வந்து கட்சியின் மூத்த தலைவர்கள் இளைஞர்களுக்கு  இடமளித்தல் இவர் காலத்தில் கொண்டு வரப்பட்டது ஆகும் .

காமராசரின் வாழ்வை முன்னுதரணமாக கொண்டு மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்று சமூகம் தேசம் தலைக்க பங்காற்றுவோம். காமராஜ் அவர்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் இறந்தார் . இன்று அந்த கருமைச்செம்மலின் நினைவு நாள்.

Leave a Response