குடியரசுத் தலைவராக முதல் பிறந்தநாளை கொண்டாடுகிறார் ராம்நாத் கோவிந்த் #HBD_President

இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது 72-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
Ramnath_Kovind_15020

உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் 1945-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி பிறந்தார். 1977 முதல் 1979 வரை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். 1998 முதல் 2002 வரை பா.ஜ.க-வின் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவின் தலைவராகப் பதவிவகித்தவர். 1994 – 2006-ஆம் ஆண்டுகள்வரை உத்தரப்பிரதேசத்தின் ராஜ்ய சபா எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த இவர், ஆகஸ்ட் 8, 2015 முதல் பீகாரின் ஆளுநராக ஜனாதிபதி மூலம் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார். தலித் தலைவர் என்ற தகுதிகளை உடைய ராம்நாத் கோவிந்தை, இந்திய ஜனாதிபதி தேர்தலுக்கான பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இன்று இந்தியக் குடியரசுத் தலைவராக உள்ளார்.

ராம்நாத் கோவிந்தை வாழ்த்தி பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும் பல அரசியல் பிரமுகர்களும் இன்று தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியக்குடியரசு தலைவராக பொறுப்பேற்றப்பிறகு அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Response