7 பேருக்கு மரண தண்டனை, இலங்கையையே உலுக்கிய தமிழ் மாணவி வித்யா!

vithiya

யாழ்ப்பாணத்தின் புங்குடுதீவு மாணவி வித்தியா 2015 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

இலங்கை நாட்டையை இந்த சம்பவம் உலுக்கியது.குற்றவாளிகளில் ஒருவரான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் பலாத்கார சம்பவத்தை வீடியோ மூலமாக வெளிநாட்டுக்கு அனுப்பியிருந்தார் என்று கூறப்பட்டதால் வெளிநாட்டு தொடர்புகள் குறித்தும் பரபரப்பு தொற்றியது.

இந்த வழக்கில், 7 எதிரிகளுக்கு ‘ட்ரையல் எட் பார்’ நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

படுகொலை வழக்கில், 7 எதிரிகள் குற்றவாளிகள் என்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பாயத்தின் மூன்று நீதிபதிகளும், தீர்ப்பளித்துள்ளனர்.

26-jul-1

முதலில் தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி சசிமகேந்திரன் தனது தீர்ப்பில், 1ஆம், 7ஆம் எதிரிகள் தவிர்ந்த ஏனைய 7 எதிரிகள் மீதான கூட்டு பலாத்காரம், கொலை, கொலை சதி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இதையடுத்து, தீர்ப்பாயத்தின் மற்றொரு நீதிபதியான அன்னலிங்கம் பிரேம்சங்கரும், அதே தீர்ப்பையை அளித்திருந்தார்.

மூன்றாவதாக, நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பை வாசித்தார். வழக்கின் எதிரிகளான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசீந்திரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன், ஜெயதரன் கோகிலன், மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் மீதான, குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

 

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத முதலாவது, ஏழாவது எதிரிகள் விடுதலை செய்யப்பட்டனர். 7 பேருக்கும் மரணதண்டனையும் தலா 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பாயம் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளதால் இலங்கை அதிபர் தீர்மானிக்கும் நாளில், தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

punkuduthivu_2

பாதிக்கப்பட்ட வித்தியா குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக எதிரிகள் ஒவ்வொருவரும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். மரணதண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்ட போது நீதிமன்றத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. தீர்ப்பைக் கேட்டதும், குற்றவாளிகளின் உறவினர்கள் நீதிமன்றத்திலேயே அழுது புரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Leave a Response