பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….?

moodi

 

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 1 கோடி ரூபாயாக இருந்த மோடியின் சொத்து மதிப்பு தற்போது 2 கோடியாகியுள்ளது.

 

சொத்து மதிப்பு 2007ம் ஆண்டு ரூ. 40 லட்சமாக இருந்தது. தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ. 2 கோடியைத் தாண்டியுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு அவர் குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் போது தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் சொத்து மதிப்பை வெளியிட்டிருந்தார். அப்போது காந்திநகர் செக்டார் ஒன்றில் அவர் ரூ. 1.30 லட்சத்துக்கு ஒரு நிலம் வாங்கியுள்ளார். அதன் சில ஆண்டுகளுக்கு முந்தைய மதிப்பு ரூ. 30 லட்சமாக இருந்தது. தற்போது அதன் மார்க்கெட் மதிப்பு ரூ. 1 கோடியாக உயர்ந்துள்ளதாகக் கூறியிருந்தார்.

எதுவுமேயில்லை:-

மோடியிடம் மோட்டார் வாகனங்கள், விமானம், படகு, கப்பல் என்று எதுவும் இல்லை. அவர் தனது வங்கிக் கணக்குகளை இன்னும் குஜராத்தில்தான் வைத்துள்ளார்.கடன்கள் இல்லை
டெல்லியில் மோடிக்கு வங்கிக் கணக்கு இல்லை. கடன்களும் அவர் பெயரில் இல்லாத நிலையில், 4 தங்க மோதிரங்கள் மட்டும் அவரது சொத்துகளில் உள்ளது. இதன் எடை 45 கிராம். இதன் மதிப்பு ரூ.1.19 லட்சம்.

மோடி

காப்பீட்டு பாலிசிகள்:-
எல் அன் டி இன்ஃப்ரா பத்திரங்கள் (வரி சேமிப்பு) ரூ.20,000, தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் வகையில் ரூ.5.45 லட்சம், ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கள் மதிப்பு ரூ.1.99 லட்சம் ஆகியவை சேர்ந்து பிரதமர் மோடியின் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.41.15 லட்சம்.ரூ. 2 கோடி
பிரதமர் உத்தரவுப்படி 15 மத்திய அமைச்சர்கள் மட்டுமே தங்களது சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளனர்.
தன்னுடைய அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.2 கோடி என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சொத்துமதிப்பை வெளியிட உத்தரவு:-

கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்றதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 31க்குள் அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து மதிப்பை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Response