செல்லாது செல்லாது, டிஜி லாக்கர் செல்லாது! -டிராபிக் போலீஸ் கைவிரிப்பு

TRAFFIC

வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு நடைமுறைக்கு வந்தது. அரசின் இந்த உத்தரவு, மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிஜினல் லைசென்ஸை கையில் வைத்திருப்பதில் உள்ள நடைமுறைப் பிரச்னைகளை கருத்தில் கொண்டு இந்த உத்தரவை தளர்த்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்!

traffic2

தவிர, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகப்படுத்திய Digilocker என்கிற மின்னணு பெட்டகத்தைப் பயன்படுத்தலாமா? என்ற கேள்வியையும் மக்கள் எழுப்பி வருகிறார்கள்!

இந்த விஷயத்தில் காவல்துறையினர், ‘ஒரிஜினல் லைசென்ஸுக்கு மாற்றாக பதிலாக டிஜி லாக்கரை ஏற்றுக்கொள்ள முடியாது. டிஜி லாக்கர் என்பது நமது அசல் உரிமங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு மட்டுமே வடிவமைக்கப்பட்டது. ‘டிஜிலாக்கர்’ மூலம் காட்டப்படும் ஆவணங்களை பரிசோதிப்பதற்கான கருவிகள் காவல்துறையிடம் இல்லை. மோட்டார் வாகன சட்டத்தில், ‘டிஜிலாக்கரில்’ ஆவணங்களைக் காட்டுவதற்கான வழிமுறைகள் இல்லை’ என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Response