இன்று அதிமுக ஏம்.எல்.ஏ.க்கள் கூட்டம்; எடப்பாடியின் தலையெழுத்து என்னாகும்?

edapad-palanisamy
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சென்னை வர வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி
நேற்று உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து இன்று எம்.எல்.ஏ.,க்கள் சென்னை வருவார்கள் என்று எதிர்ப்பார்க்க படுகிறது. மாவட்ட வாரியாக அவர்களை சந்திக்க முடிவும் செய்துள்ளார்.

முதல்வருக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். முதல்வர் பதவி விலக வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர். கவர்னரிடம் மனு அளித்த அவர்கள் புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். ஆனால் 10 நாட்கள் ஆகியும் இப்பிரச்சனை குறித்து கவர்னர் வித்யா சாகர் ராவ் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், டி.டி.வி.தினகரன், தனது ஆதரவு எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு விரைவில் குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் இன்று (ஆக.,31) சென்னை வர முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இன்று காலை 10 மணி முதல், மாவட்ட வாரியாக, எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். தலைமை செயலகத்தில் நடக்கும் இந்த சந்திப்பின் போது, அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். முதல்வர் அலுவலகத்திலிருந்து எம்எல்ஏக்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து இன்று எத்தனை எம்எல்ஏக்கள் கலந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து தான் எடப்பாடி பழனிசாமியின் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என தெரிகிறது.

டி.டி.வி.தினகரன் தரப்பு 21 எம்எல்ஏக்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் இன்று எடப்பாடியை சந்திப்பார்களா ? தற்போதுள்ள அரசை காப்பாற்றுவார்களா ? என்பது விரைவில் தெரியவரும்.

Leave a Response