முத்தழகை கொத்திக்கொண்டு போன முஸ்தபா!

priya

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அமீர் இயக்கத்தில் வந்த பருத்திவீரன் படத்தில் நடித்ததற்கு பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில், பிரியாமணிக்கும், தொழிலதிபர் முஸ்தபா ராஜூவுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து நேற்று பெங்களூரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இன்று மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளயிருக்கிறார்கள்.

Leave a Response