நேர்த்திக் கடன் செலுத்தாததால் தீங்கு நேர்கிறதா? இதோ எளிய பரிகாரம்

temple2

எங்கள் குடும்பத்தை வாழ வைக்க வேண்டும், இந்த காரியம் உடனே நடக்க வேண்டும் திருமணத்தடை நீங்கிடவேண்டும் என்று பல்வேறு பிரச்னைகளை இறைவனிடம் சொல்லி எனக்கு நல்லதைச் செய்தால் நான் குடும்பத்தோடு வந்து அதைச் செய்கிறேன். இதைச் செய்கிறேன் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வார்கள். தங்களது நிலையில் மாற்றம், முன்னேற்றம் என வந்தவுடன் வேண்டுதலை மறந்து விடுவார்கள்.

நல்ல நிலையில் சென்ற குடும்பத்தின் நிலைமையில், தசாபுக்தி மற்றும் கிரகப் பெயர்ச்சிகள் காரணமாக இடையூகள் வந்து செல்லும் பொருளாதார சிக்கலும் வரும்.

அப்போது அக்கம்பக்கம் உள்ளவர்கள், “உங்கள் சிரமத்திற்குக் காரணம் தெய்வத்துக்கு நீங்களும் முன்னோர்களும் செய்துள்ள நேர்த்திக் கடன்களை செலுத்தாததே” என்பார்கள். கஷ்டம் அதிகம் வந்தவுடன் சிலர் “நாம் நேர்த்திக்கடன் செலுத்த கோவிலுக்குச் செல்லவில்லை, அதனால் தெய்வக்குற்றம் ஆகிவிட்டது” என்று அந்த. நேரத்தில் நினைப்பார்கள்.
Temples

பரிகாரம்: முன்னோர்கள் நேர்த்திக்கடன் செலுத்தாத குற்றம் நீங்கிட, எந்த ஆலயம் செல்வது என்று அலைய வேண்டாம். உங்கள் குலதெய்வத்தை மூன்று பௌர்மிக்கு சென்று வணங்கி வந்தால் அனைத்து நேர்த்திக்கடனும் செலுத்தப்பட்டதாகி விடும். குடும்பத்தில் எப்போதும் நிம்மதி நிலவும்.

சிலர் தலைமுறை இடைவெளி காரணமாக முன்னோர்கள் விட்டுச் சென்ற நேர்த்திக் கடனைச் செலுத்திட குலதெய்வம் எதுவென்று தெரியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் அருகிலுள்ள அம்மன் ஆலயம், முருகன் ஆலயம், பெருமாள் ஆலயம் சென்று வணங்கி வர, எத்தனை தலைமுறை வேண்டுதல் இருந்தாலும் குற்றங்கள் நீங்கும். நன்மைகள் நடக்கும்.

Leave a Response