இனி ஆதார் மூலம் புதிய வேலையிலும் ஒரே வைப்புநிதி கணக்கு

EPF-Withdrawal-Rules
பி.எஃப் எனப்படும் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியில் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொழிலாளர்கள் எளிதில் கையாளும் வகையில் வசதி செய்யப்படுவதாக பி.எஃப் தலைமை ஆணையர் ஜாய் கூறியுள்ளார்.

ஒரு நிறுவனத்தில் இருந்து வேறொரு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் போது, ஏராளமானோர் தங்கள் பி.எஃப் கணக்கை முடக்கி விடுகின்றனர். பின்னர் புதிதாக பி.எஃப் கணக்கை தொடங்கிக் கொள்கின்றனர்.

தற்போது பி.எஃப் கணக்கை தொடங்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் பி.எஃப் கணக்கை முடக்குவதை விரும்பவில்லை என்று ஜாய் குறிப்பிட்டுள்ளார். பி.எஃப் கணக்கு என்பது நிரந்தரமான கணக்கு.

சமூக பாதுகாப்பிற்காக தங்கள் பி.எஃப் கணக்கை, தொழிலாளர்கள் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். புதிதாக ஒரு நிறுவனத்தில் சேரும் தொழிலாளர்களுக்கு, எந்தவித விண்ணப்பத் தேவையும் இல்லாமல் 3 நாட்களுக்குள் பி.எஃப் கணக்கு வந்து சேர்ந்துவிடும்.

ஆதார் எண்ணைக் கொண்டு, உலகின் எந்த ஒரு நாட்டில் பணிபுரிந்தாலும் அவர்களின் பி.எஃப் கணக்கின் பணம் தொடர்ந்து வரும். இந்த செயல்பாடு விரைவில் அமல்படுத்தப்படுகிறது.

இதுதொடர்பாக கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

பி.எஃப் பணத்தை வீடு கட்டுதல், குழந்தைகளின் கல்வி, அவசர மருத்துவ செலவு உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே வாழ்நாள் முழுவதும் ஒரே பி.எஃப் கணக்கை பயன்படுத்துவது இனி எளிதாகிவிடும்.

Leave a Response