கதிராமங்கலத்தில் மு.க. ஸ்டாலின். போராட்டத்தில் குதிக்குமா தி.மு.க.?

porattam

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற கோரி பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 21-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.

அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவ-மாணவிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஓ.என்.ஜி.சி. பாதிப்பு குறித்து தி.மு.க. செயல் தலைவரும் , சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கதிராமங்கலம் சென்று பொதுமக்களிடம் கருத்து கேட்டார்.

mk-stalin

அவரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். அப்போது எண்ணெய் கலந்த குடிநீரை பாட்டிலில் பிடித்து வைத்திருந்த பெண்கள் அதனை மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து கண்ணீர் வடித்தனர்.

ஓ.என்.ஜி.சி. பணியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வேதனையுடன் கூறினர். அதனை பொறுமையாக கேட்டுக் கொண்ட ஸ்டாலின் இதற்காக உரிய நடவடிக்கை எடுக்க தி.மு.க. போராடும் என்றார்.

72 நாட்களாக கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்தி வரும் மக்களை காக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறினர்.

Leave a Response