எழும்பூர் ரயில் நிலையத்தில் ப்ரீபெய்டு ஆட்டோ மையம் மூடியிருப்பதால் அவதிப்படும் பயணிகள்!

aatto

பயணிகளின் வசதிக்காக எழும்பூர் ரயில் நிலையத்தின் இருபுறமும் ப்ரீபெய்டு ஆட்டோ மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், மாலை 6 மணிக்கு பிறகு இந்த பயணிகளின் வசதிக்காக எழும்பூர் ரயில் நிலையத்தின் இருபுறமும் ப்ரீபெய்டு ஆட்டோ மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், மாலை 6 மணிக் குப் பிறகு இந்த ப்ரீபெய்டு ஆட்டோ மையங்கள் இழுத்து மூடப்படுகின்றன. இதை வாய்ப் பாகப் பயன்படுத்திக் கொண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக் கின்றனர். இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘எழும்பூர் ரயில் நிலையத்தில் இருபுறமும் ப்ரீபெய்டு ஆட்டோ மையம் இருக்கிறது. ஆனால், மாலை 6 மணிக்கு பிறகு மூடியிருக்கிறது. இதனால், ஆட்டோ ஓட்டுநர்கள் பேரம் பேசி அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அதுபோல், காலை நேரங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ மையத்துக்கு செல்லவே ஆட்டோ ஓட்டுநர்கள் அனுமதிப்பதில்லை. ப்ரீபெய்டு கட்டணத்தை விட ரூ.25 முதல் ரூ.50 வரையில் அதிகமாக கட்டணத்தை வசூலிக்கின்றனர். இவர்கள், பயணிகளிடம் பேரம் பேசி ஆட்டோ கட்டணத்தை வசூலிக்கிறார்கள். எனவே, ப்ரீபெய்டு ஆட்டோ சேவையை 24 மணி நேரமும் வழங்க வேண்டும். இங்குள்ள ஆட்டோக்களை ஒழுங்குப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Leave a Response