தென்னையைத் தாக்கும் குருத்தழுகல் நோய் கட்டுப்படுத்தும் முறையை தெரிந்து கொள்ளுங்கள் !

thennai
தமிழகத்தில் சில இடங்களில் பெருமழை பொழிகிறது அந்நேரத்தில் மழைநீர் சில நாட்கள் தங்கியுள்ள தென்னந்தோப்புகளிலும், குளங்கள் அருகிலுள்ள தோப்புகளிலும் மற்றும் ஊடுபயிராக இருக்கும் நெல் பயிரிடப்பட்ட தோப்புகளில் தென்னை மரங்கள் குருத்தழுகல் நோய் என்ற பூசண நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

குருத்தழுகல் நோய் பாதித்த தென்னையில் குருத்து வாடி அழுகித் தொங்கும். முழுவதும் பாதிக்கப்பட்ட குருத்து பிடித்து இழுத்தால் கையோடு வந்து விடும். குருத்தின் அழுகிய பகுதியை அறுத்து எடுத்து விட்டு போர்டோ பசை தடவ வேண்டும். அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு எனப்படும் புளு காப்பர் மருந்தை பசை போல் கரைத்து தடவ வேண்டும்.

மேலும் கலவையினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டரை கிராம் வீதம் குறுத்து மற்றும் அருகில் உள்ள மட்டை இடுக்குகளில் தெளிக்க வேண்டும். பாதிப்பு ஏற்பட்ட மரத்துக்கு அருகில் உள்ள மரங்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாக தெளிக்க வேண்டும்.

Leave a Response