குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல்!

nayudu

குடியரசு துணைத்தலைவா் ஹமீது அன்சாாியின் பதவிகாலம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து அந்த பதவிக்கான தோ்தல் வருகிற 5ம் தேதி நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிா்க்கட்சிகள் சாா்பில் குடியரசு துணைத்தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோபால கிருஷ்ண காந்தி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வாா் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆளும் பா.ஜனதா கூட்டணியின் சாா்பில் நேற்று மாலை குடியரசு துணைத்தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வெங்கையா நாயுடுவும் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

மத்திய நகா்ப்புற மேம்பாட்டுத்துறை, தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சராக பதவி வகித்த வெங்கையா நாயுடுவும், மகாத்மா காந்தியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தியும் குடியரசு துணைத்தலைவா் தோ்தலில் போட்டியிடுவது மத்திய அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response