கிராமமக்கள் கடந்து போகும் நதி!

river1
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் அடுத்த கிர்ச்சியில் பாய்ந்து கொண்டிருக்கும் நதி அதன் பெயர் தவி.

தவி ஆற்றின் ஒருபக்கம் 4 கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில் அடிப்படை பெரியதாக இல்லை.பள்ளி, கல்லூரி, கடைகளுக்கு செல்ல ஆற்றின் மறுபுறம் உள்ள நகரப் பகுதிக்கு தான் போக வேண்டும். ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால், பொதுமக்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக மாறிவிடும். பள்ளி,கல்லூரிக்கு செல்பவர்கள் உயிரை பணயவைத்து செல்லவேண்டியுள்ளது.

சமீபத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில், குழந்தைகள் உயிரை பணயவைத்து நடந்து செல்லும் புகைப்படங்கள் வெளியாகின. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, ஆற்றைக் கடக்க பொதுமக்கள், மாணவர்களுக்கு பாலம் கட்டி உரிய வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
river
std

Leave a Response