ஜூன் 23 -ல் வெளியாகும் “வனமகன்”…

vana
திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க, இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் தான் ‘வனமகன்’. இப்படம் அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் சாயீஷா ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தில் முதன்முறையாக ஹரீஸ் ஜெயராஜ் மற்றும் மதன் கார்க்கியும் இயக்குனர் விஜய் மூவரும் கை கோர்த்திருக்கிறார்கள். மேலும் படத்திற்கு சிறப்பு இப்படம் ஹாரிஸ் ஜெயராஜிற்கு 50வது படமாகும். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

நான் ஏசி ரூமில் உட்கார்ந்து எந்த ஒரு சிரமம் இல்லாமல் பாடல் எழுதி கொடுத்துவிட்டேன், ஆனால் இப்பட குழு அனைவரும் காட்டில் கஷ்டப்பட்டு பாடலை ஷூட் பன்ணிட்டு வந்துருக்காங்க. பழங்குடியினர் வாழ்க்கையை பற்றி எழிதாக சொல்லும் ஒரு மிக முக்கியமான படம் இது. ஜெயம் ரவி இந்த மாதிரி வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதால் தான் அவர் படத்தில் வேலை செய்யும் மற்ற கலைஞர்கள் அவர்களின் திறமையை வேறு பரிமாணத்தில் வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கின்றன என்று கூறியுள்ளார் மதன் கார்க்கி.

நான் பெரிய நடிகன், என் படத்தை ரசிகர்கள் வந்து பார்ப்பார்கள் என நினைத்து எடுக்கப்படும் படங்கள் ஒரு வகை. இன்னொரு வகை சின்சியராக நடிப்பது என் வேலை என கதைக்காக மெனக்கெட்டு நடிப்பவர்கள். அந்த வகையில் ஜெயம் ரவி ரொம்ப சின்சியரான நடிகர். தேவையில்லாத வசனங்கள் எதுவும் படத்தில் இருக்காது. படத்தில் புலி சண்டைக்காட்சி சிறப்பாக அமைந்திருக்கிறது. படம் முடியும் போது எல்லோரும் மனநிறைவோடு திருப்தியுடன் வெளியே போவார்கள். தரமான படத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தன் சொந்த பணத்தை எந்தவித தயக்கமும் இன்றி செலவு செய்ய நினைத்த விஜயின் கலை தாகம் பாராட்டுக்குரியது என்றார் தனஞ்செயன்.

இந்த படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்து படத்துக்கு உழைத்த நல்ல கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பால் தான் இந்த படம் உருவாகியிருக்கிறது. நான் மட்டும் தான் ஈஸியா வேலை செஞ்சேன்னு மதன் கார்க்கி சொல்றதுலாம் சுத்த பொய்ங்க. அவர் தான் அவருடைய மூளையை கசக்கி கஷ்டப்பட்டு தான் பாட்டு எழுதியிருக்கிறார். என் படத்தில் நடிக்கிற ஹீரோயின்கள் எல்லோரும் பெரிய ஹீரோயின் ஆகிடுவாங்கனு சொல்வாங்க. அது உண்மைதான் நிச்சயம் சாயிஷாவும் பெரிய ஹீரோயின் ஆகிடுவாங்க. மேலும் விஜய் மாதிரி சினிமாவை நேசிக்கும் ஒருவரால் தான் இந்த படத்தை எடுக்க முடியும். இந்த படம் ஒரு நல்ல விஷயத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறது. கூட்டுக் குடும்பமாக வாழும் மலை சார்ந்த மக்களை பற்றிய படம் தான் இது. சின்சியராக உழைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். தமிழனாக இருந்தால் படத்தை நெட்டுல போடாதீங்க. போட்ட பணத்தை நிச்சயம் இந்த படம் திரும்ப எடுக்கும். அப்படி படம் ஒடலைனா நான் சம்பளம் வாங்காமல் விஜய்க்கு ஒரு படம் நடித்து கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார் இப்படத்தின் நாயகன் ஜெயம் ரவி.

மேலும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தம்பி ராமைய, நடிகர் சண்முகராஜன், சாம் பால், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். வரும் ஜூன் 23ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

Leave a Response