பாகிஸ்தானை கண்டு பயமில்லை…. விராட் கோலி

virat
நேற்று நடந்த இந்தியா-பங்களாதேஷ் போட்டியில் இந்தியா அபாரமானவெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தகுதி பெற்றது.இதை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வரும் (ஜூன் 18) ஞாயிறு அன்று மோத உள்ளது. இப்போட்டி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார்.

இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் அனைவராலும் கவனிக்கப்படுகின்றது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது அதில் கூடுதலாக கவனிக்கப்படுகின்றது.

நாம் இந்த போட்டி ஒரு பெரிய போட்டி என நினைக்கத் தொடங்கினாலே நாம் எதிரணி குறித்து அவர்கள் அஞ்சத்தொடங்கி விட்டதாக தான் அர்த்தம். அதனால் எந்த போட்டியாக இருந்தாலும் நாங்கள் சாதாரணமாகவும், முழு திறமையை வெளிப்படுத்தி விளையாட நினைப்போம்.

எங்கள் அணியின் பலம், பலவீனம் என்னவென்று எனக்கு நன்றாக தெரியும். அதே போல, பாகிஸ்தானி பலம், பலவீனம் குறித்து அவர்களுக்கும் நன்றாகவே தெரியும். அந்த அணிக்கு எதிராக எப்படி செயல்படுவது என சில வியூகங்கள் வகுத்துள்ளோம்.

விளையாட்டை விளையாட்டாக பார்த்தால் தான் களத்தில் சிறப்பாக விளையாடமுடியும். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வெற்றி பெற முடியும், ஒரு அணியை விட மற்றொரு அணி அதிக திறமையுடன் இருக்கும்போதும், அதற்க்கேற்ப்ப செயல்பட வேண்டும். என கோலி தெரிவித்துள்ளார்.

நாங்கள் எங்கள் வீரர்கள் சார்பில் சிறப்பான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக உள்ளோம். இந்த தொடரில் நம் வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இக்கட்டாண நிலையில் தென் ஆப்ரிக்காவையும், அரையிறுதியில் வங்கதேச அணியையும் வீழ்த்தியது மிகவும் சிறப்பான தருணமாக பார்க்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

வரும் (ஜூன் 18) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்துவோம். என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Leave a Response