மீண்டும் இணையும் பாகுபலி கூட்டணி…

prabas
ஏற்கனவே இந்திய சினிமாவை புரட்டி போட்ட பாகுபலி படம் இரண்டு பாகங்களாக வந்து சக்கை போடு போட்டது. இந்நிலையில் மூவரும் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. கரண் ஜோஹர் தயாரிப்பில் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்க ராஜமெளலி தயாராகி வருகிறார் என்கிறது தகவல். அதப்பத்தி முழுசா தெரிஞ்சிக்கலாம் வாங்க.

ராஜமெளலியின் நெருங்கிய வட்டாரம் இதுகுறித்து கூறியதாவது: பிரபாஸ் சாஹு படத்தில் தற்போது மும்முரமாக உள்ளார். அதற்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பிரபாஸை ஹிந்தியில் அறிமுகம் செய்ய கரண் ஜோஹர் ஆர்வமாக உள்ளார்.

எனவே அவருடைய தயாரிப்பில் இப்படம் உருவாகலாம். எல்லாமே பேச்சுவார்த்தை நிலைமையில்தான் உள்ளது. இறுதி வடிவம் பெற்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவர நாளாகும் என்று தகவல் தெரிவிக்கிறார்கள்.

Leave a Response