ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது…

rocket
ஏற்கனவே நம்ம நாட்டில் ராக்கெட் விடுவதை பார்த்து வேற நாடுகள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்து உள்ளது. இந்நிலையில் இன்று மாலை ஜிஎஸ்எல்வி மார்க் 3 இன்று விண்ணில் பாய உள்ளது. வாங்க இத பத்தி முழுசா தெரிஞ்சிப்போம்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட, அதிக எடை தாங்கும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டை இஸ்ரோ நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்ட் டவுண் நேற்று தொங்கியது.

பூமியின் சுற்றுவட்ட பாதையில் செய்ற்கைக்கோளை நிலைநிறுத்த பயன்படும் இந்த ராக்கெட்டின் தயாரிப்புப் பணிகள் 2000ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2009-10ஆம் ஆண்டிலேயே விண்ணில் ஏவப்பட இருந்த இந்த ராக்கெட் பல்வேறு காரணங்களால் தடைபட்டது.

இந்நிலையில் வரும் ஜூன் 5ஆம் தேதி ஜிசாட்-19 செயற்கைக்கோளை தாங்கியபடி ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது. இதன் மூலம் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோவின் முயற்சியின் புதிய அடி எடுத்துவைக்கப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஜிசாட்-19 செயற்கைக்கோள் ஏழு செயற்கைக்கோள்களுக்கு சமமான திறன் கொண்டது என்றும் இதன் மூலம் தகவல் தொழில்நுட்பத்துறை சேவைகள் உயர்தரத்தில் மேம்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Response