அட என்னங்க அநியாயம் இப்படிலாம் கூட நடக்குதா?..

muthiyavar
என்னடா அநியாயம் பாக்குறிங்களா அது என்னனு தெரிஞ்சிக வாங்க முழுசா படிச்சி தெரிஞ்சிக்கலாம்.

அதாவது காரியாபட்டி அருகே தோனுகால் கிராமத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் முதியோர் உதவித்தொகை பெற்று வருகின்றனர். ஆதரவற்ற நிலையில் உள்ள இவர்களுக்கு கல்குறிச்சி வங்கியின் முகவர் பெரியபாண்டி என்பவர் உதவி தொகை பனத்தை கிராமத்திற்கு கொண்டு வந்து கொடுப்பது வழக்கமாக இருந்தது.

இந்நிலையில் பெரியபாண்டி உதவித்தொகை ஆயிரத்தை கொடுக்கும் போது நூறு ரூபாய் எடுத்துக்கொண்டு தருகிறார் என்றனர். எதற்கு என கேட்டால் மிஷின் பழுது நீக்கவும், நான் அலைந்து வருவதால் எனக்கு கூலி எனவும் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதியவர்கள் அனைவரும் பலமுறை வங்கி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் முதியோர்கள் ஒன்று சேர்ந்து தாலுகா அலுவலகத்தில் வங்கி முகவர் பெரியபாண்டி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வழங்கப்படும் உதவி தொகை பணம் முழுவதும் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரியும் மனு கொடுக்கும் போரட்டத்தில் ஈடுபட்டனர். மனுவை பெற்றுக்கொண்ட தனி வட்டாட்சியர் அறிவழகன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் முதியோர்கள் கலைந்து சென்றனர்.

Leave a Response