ஜூன் 13-ஆம் தேதி வரவிருக்கும் நோக்கியா 3,5 மற்றும் 6…

nokia
நோக்கியா என்றால் நம்பிக்கையாக வாங்கலாம் என்று அனைவர் மனதில் அச்சாணியாக இருக்கிறது. இந்நிலையில் நோக்கியா மூன்று ஸ்மார்ட்போன் வெளியிட. வாங்க முழுசா தெரிஞ்சிப்போம்.

அதாவது ஜூன் 13-ஆம் தேதி அன்று நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள் இந்திய சந்தைக்குள் விற்பனைக்கு நுழையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னர் வெளியான அறிக்கையில் அனைத்து ஸ்மார்ட்போன்களும் ஒரே நேரத்தில் கிடைக்காது என்றுகூறப்பட்டிருந்தது. அது சார்ந்த தெளிவான விளக்கங்கள் இல்லை.

அப்படியாக நோக்கியா 3 ஸ்மார்ட்போன் முதலில் கிடைக்கும் மற்றும் நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 தொடர்ந்து வெளியாகும் வரும் என்று வெளியான அறிக்கை கூறுகிறது.

ரூ.20,000/- என்ற விலை நிர்ணயம் கொண்ட நோக்கியா 6 ஆனது 5.5 அங்குல முழு எச்டி 1080பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, 3 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி சேமிப்பு, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 செயலி, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு, 8எம்பி செல்பீ கேமரா, 16எம்பி ரியர் கேமரா, கைரேகை சென்சார், 4ஜி எல்டிஇ, 3000எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது.

ரூ.15,000/- என்ற விலை நிர்ணயம் கொண்ட நோக்கியா 5 ஆனது 5.2 அங்குல எச்டி 720பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி, 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு, 13எம்பி பின்புற கேமரா, 4ஜி எல்டிஇ, 3000எம்ஏஎச், ஓடிஜி ஆதரவு ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

ரூ.10,000/- என்ற விலை நிர்ணயம் கொண்ட நோக்கியா 3 ஆனது 5 அங்குல எச்டி 720பி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியா டெக் எம்டி6737 செயலி, 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு, 8எம்பி ரியர் கிம், 8எம்பி செல்பீ கேம், ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட், ஓ.டி.ஜி. ஆதரவு, 4ஜி எல்டிஇ, 2650எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது.

Leave a Response