பிஎஸ்என்எல் அதிரடி திட்டம் : பொது மக்களுக்கு செயற்கைக்கோள் செல்பேசி…

நம்ம வரதா புயல், மற்றும் வெள்ளத்தால் பாதிக்க பட்ட பொழுது எந்த நெட்வொர்க் சிக்னல் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இப்போ அதற்க்கு தீர்வு ஒன்று பிஎஸ்என்எல் எடுக்க உள்ளது வாங்க என்னனு தெரிஞ்சிக்காலம்.

மழை மற்றும் புயலில் பாதிக்காத, அவ்வளவு ஏன் விமானத்திலும், கப்பலில் செல்லும் போதும் பயன்படுத்தத்தக்க செயற்கைக்கோள் செல்பேசிகளை அறிமுகம் செய்ய பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நாட்டின் எந்த மூலையிலும், யார் வேண்டுமானாலும் பயன்படுத்தத்தக்க செயற்கைக் கோள் செல்பேசிகளை இன்னும் 2 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்த பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது.

சர்வதேச கடலாண்மை நிறுவனத்திடம் இதற்காக விண்ணப்பித்துள்ளோம். அதற்கான நடைமுறைகளை நிறைவடைய சில காலம் எடுக்கும். இந்தியக் குடிமகன்கன் செயற்கைக் கோள் செல்பேசி சேவையைப் பெற இன்னமும் 18 முதல் 24 மாதங்கள் ஆகும் என்று பிஎஸ்என்எல் நிர்வாகி மற்றும் செயல் இயக்குநர் அனுபம் ஸ்ரீவத்சவா கூறினார்.

இந்தியாவின் எந்த மூலையிலும் செயற்கைக் கோள் செல்பேசியைப் பயன்படுத்த முடியும். விமானத்துக்குள்ளும், கப்பலிலும் கூட பயன்படுத்தலாம். bsnl பூமியில் இருந்து சுமார் 35,700 கி.மீ. தொலைவில் இருக்கும் செயற்கைக் கோளில் இருந்து நேரடியாக செல்பேசிக்கு சமிக்ஞை கிடைக்கும் என்பதால் எங்கும் இதனைப் பயன்படுத்தலாம்.

Leave a Response